அரசரோடு வீரர் சூழ்ந்து வந்தமை

288.யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
      அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
     தெளிப டைக்கல னிலாவொளி படைத்து வரவே.

     (பொ-நி.)   அரசு   அநேகம்   வர,   படைக்கலன்  நிலா  ஒளி
படைத்துவர; (எ-று.)

     (வி-ம்.) அடுகளிறு - கொல்கின்ற யானை. மிசை -மேலிடம். தெளி-
மாசற்ற. படைக்கலன் - வாள் முதலிய படைக்கருவி. நிலா ஒளி-நிலவைப்
போன்ற ஒளி. படைத்து-உண்டாக்கி.
                                                      (57)