முரசு முழக்கும் கொடி வரிசையும் 289. | முகிலின் மேன்முகில் முழங்கிவரு கின்ற தெனவே | | மூரி யானைகளின் மேன்முர சதிர்ந்து வரவே துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே தோகை நீள்கொடிகள் மேன்முகி றொடங்கி வரவே. |
(பொ-நி.) யானைகளின்மேல் முரசதிர்ந்துவர, கொடிகள் மேல் முகில் தொடங்கிவர; (எ-று.) (வி-ம்.) முகில் - மேகம். மூரி - வலிமை. துகில் - துகிற்கொடி. தோகை - பெருங்கொடிகள். முகில் தொடங்கி - மேகங்கள் தொடர்ந்து. வானத்தே துகிற்கொடியும் மேகமும் மாறுபட்டுத் தோன்றின என்க. (58) |