கனவுநிலை கூறி விளித்தது | 29. | இகலி ழந்தரசர் தொழவ ருப்பவனி | | | இரவு கந்தருளு கனவினில் பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) பகல் பவனி(யில்) இழந்த நிறைபெற முயன்று, இரவு கனவினில் மொழி பதறுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) இகல்-வலி. பவனி-உலாவில். உகந்தருளும் - விரும்பிக்காணும். பகல்-பகற்பொழுதில். பதறுதல்-துடிப்புறுதல்; நிறை-மனத்தை நிலைதிரியாமல் நிறுத்தல்; மொழி பதறுவீர் - புணர்ந்து மொழி பதறுவீர் என்க. பகலில் நிறையழிந்தும் இரவில் கனவில் புணர்ந்தும் இருந்தனர் என்க. (9) |
|
|