பெண்கள் தேர்மீது வந்ததும் புழுதி எழுந்ததும் 290. | தேரின் மீதுவரு தேர்களும நேகம் எனவே | | செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே பாரின் மீதுமொரு பாருளது போலும் எனவே படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. |
(பொ-நி.) நிதம்பநிரை தேரின் வர, படல தூளியும் இடையின் மூடிவர; (எ-று.) (வி-ம்.) மேகலை-மேகலை என்னும் அணி; இது, மு ப்பத்திரண்டு வடத்தினாற் செய்தது; நிதம்பம்-இடையைச் சார, முன் பக்கத்துள்ள பரந்த இடப்பகுதி. நிரை - வரிசை. பார் - உலகம். படலம்-கூட்டம். தூளி-புழுதி. இடை-வானிடை. (59)  |