சேனைகளின் செலவு 291. | யானை மேலிளம் பிடியின் மேனிரைத் | | திடைய றாதுபோம் எறிக டற்கிணை சேனை மாகடற் கபய னிம்முறைச் சேது பந்தனம் செய்த தொக்கவே. |
(பொ-நி.) நிரைத்து, போம், கடற்கு இணை (யானை) சேனை அபயன் இம்முறை கடற்கு சேதுபந்தனம் செய்தது ஒக்க; (எ-று.) (வி-ம்.)நிரைத்து - வரிசையாக, எறி - அலை எறிகின்ற. இணை சேனை - ஒத்த சேனை. இம்முறை - இராமனாகப் பிறந்த பொழுதிலன்றி இப்பிறவியிலே, ஒக்க-ஒப்பாக இருக்க. முழுச்சேனையும் கடல்போலவும், யானைமேலும் பிடிமேலும் செல்வார் சேதுபந்தனம் செய்வார்போலவும் காட்சியளித்தனரென்க. (60)  |