சிவிகையும் குடையும் சென்ற இயல்பு

292.நீல மாமணிச் சிவிகை வெள்ளமும்
      நித்தி லக்குலக் கவிகை வெள்ளமும்
காலி னான்வரும் யமுனை வெள்ளமும்
     கங்கை வெள்ளமும் காண்மின் என்னவே.
 
    (பொ-நி.) சிவிகை  வெள்ளமும்,  கவிகை  வெள்ளமும்,  யமுனை
வெள்ளமும், கங்கை வெள்ளமும் (ஆதலைக்) காண்மின்; (எ-று.)

     (வி-ம்.)சிவிகை - பல்லக்கு. வெள்ளம் - கூட்டம். நித்திலம் -முத்து.
கவிகை  -  குடை.  காலினால் - வாய்க்கால்  வழியே;   அன்றித்   தம் 
கால்களினால். வரும் - நடந்துவரும்.                           (61)