கொடிகள் சென்ற இயல்பு

293.கெண்டை மாசுணம் உவணம் வாரணம்
      கேழல் ஆளிமா மேழி கோழிவில்
கொண்ட ஆயிரம் கொடிநு டங்கவே
     குளிறு வெம்புலிக் கொடிகு லாவவே.

     (பொ-நி.) ஆயிரம் கொடி நுடங்க, வெம்புலிக்கொடிகுலாவ; (எ-று.)

    
 (வி-ம்.)  கெண்டை - மீன். மாசுணம் - பாம்பு. உவணம் - கருடன்.
வாரணம் - யானை. கேழல்-பன்றி. ஆளி-சிங்கம். மேழி-கலப்பை. நுடங்க-
அசைய. குமுறு - பெருமுழக்கஞ்செய்கின்ற.  குலாவ-(அவற்றுள்)மேம்பட்டு
விளங்க.                                                 (62)