பெண்கள் கூட்டம் பரந்தது

294.தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
      சோதி வாண்முகம் கோதை யோதிமென்
நடைகள் மென்சொலென்று அடைய வொப்பிலா
     நகைம ணிக்கொடித் தொகைப ரக்கவே.

     (பொ-நி.) தொடைகள், கந்தரம்,  கொங்கை,  கண்,  முகம்,  ஓதி,
மென்நடைகள்,  மென்  சொல்  என்று  ஒப்பிலாகொடித் தொகை பரக்க;
(எ-று.)

     (வி-ம்.) கந்தரம்-கழுத்து. புடைத்தல்-முற்பட்டுத்தோன்றுதல். வாள்-
ஒளி. கோதை - மாலை.  ஓதி-கூந்தல்.  அடைய-இவை  எல்லாவற்றாலும்.  நகை-புன்முறுவல்,  மணிக்கொடி-அழகிய  பூங்கொடி(போன்ற  பெண்கள்.) தொகை - கூட்டம். பரக்க-பரவ.
                                                       (63)