இதுவும் அது 295. | எங்குமுள மென்கதலி யெங்குமுள | | தண்கமுகம் எங்குமுள பொங்கு மிளநீர் எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள செங்குமுதம் எங்குமுள செங்க யல்களே. |
(பொ-நி.)கதலிஎங்குமுள; கமுகம் எங்குமுள; இளநீர் எங்குமுள; குமிழ்கள் எங்குமுள; குமுதம் எங்குமுள; கயல்கள் எங்குமுள; (எ-று.) (வி-ம்.) கதலி - தொடைகளாகிய வாழை. கமுகு-கழுத்துக்களாகிய பாக்கு மரம். இளநீர்-கொங்கைகள். குமிழ்-மூக்குக்களாகிய குமிழம் பூக்கள். குமுதம்-வாயிதழாகியசெவ்வாம்பல். கயல்-கண்களாகிய மீன்கள். (64) |