உடன்சென்ற யானைக்கூட்டத்தின் காட்சி

297.வேழநிரை என்றமலை யெங்குமிடை
      கின்றஅயில் வென்றிஅப யன்ற னருளால்
வாழஅப யம்புகுது சேரனொடு
     கூடமலை நாடடைய வந்த தெனவே.
 
     (பொ-நி.)
  வேழநிரை, எங்கும்மிடைகின்ற, அபயம்புகுது சேரனொடு
மலைநாடு அடைய வந்ததென; (எ-று.)

     (வி-ம்.)   வேழநிரை   -   யானைக்கூட்டம்.   மலை:   உருவகம்.
மிடைகின்ற-நெருங்கிச் செல்வன. அயில் -வேல்.  வாழ - நல்வாழ்வு பெற, அபயம்  - அடைக்கலம். புகுது - புகுந்த. அடைய - முற்றும்.  யானைகள்
நெருங்கியிருப்பன மலை நாடே வந்தது போன்றிருந்த தென்க.
                                                        (66)