இதுவும் அது 298. | அக்கிரிகு லங்கள்விடும் அங்குலியின் | | நுண்திவலை அச்செழியர் அஞ்சி விடுமத் திக்கிலுள நித்திலமு கந்துகொடு வீசியொரு தென்றல்வரு கின்றதெனவே. |
(பொ-நி.) கிரிகுலங்கள் விடும் திவலை நித்தில முகந்துகொடு வீசி,தென்றல் வருகின்றதென; (எ-று.) (வி-ம்.) கிரிகுலம்-யானைக்கூட்டம். அங்குலி - துதிக்கையின் நுனி. திவலை - நீர்த்திவலை, செழியர் - பாண்டியர். அத்திக்கு -தெற்குத் திக்கு. நித்திலம் - முத்து. முகந்து - மொண்டு கொடு. இடைக்குறை (கொண்டு) என - என்று சொல்லும்படி ஆக. (67) |