குலோத்துங்கன் தில்லைக் கூத்தனை வணங்கித் திருவதிகை யடைந்தது 299. | தென்றிசையி னின்றுவட திக்கின்முகம் | | வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன் மன்றினட மாடியருள் கொண்டு விடை கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. |
(பொ-நி.) வடதிக்கின் முகம் வைத்தருளி, மன்றின் நடமாடி அருள் கொண்டு, விடைகொண்டு, அதிகை நகருள் விட்டருளி; (எ-று.) (வி-ம்.)முகம் வைத்தல்- முகம்நோக்கிப் புறப்படல். வெள்ளிமலை- கைலைமலை. மன்றில் நடமாடி: தில்லைக்கூத்தன். அதிகைமா நகர்- திருவதிகை என்னும் சிறந்த நகரம், விட்டருளி-சேனைகளோடு தங்கியருளி. (68) |