பற்குறியணி கூறி விளித்தது

30. முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேல்
     முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர்
   மணிப்பொற் கபாடம் திறமினோ.
   

    (பொ-நி) முலைமேல்,  செவ்வாய்  வைத்த,  பவளவடம்  பனைவீர்
திறமின்; (எ-று.)

    
(வி-ம்.) வடம்-மாலை. முகிழ்-தாமரைமொட்டு. முயங்குதல்-புணர்தல். கொழுநர்-கணவர். மணி-அழகிய. வைத்த பவளம்-பதித்த பவளம் போன்ற
பற்குறி. வடம்-மாலை  போன்ற  ஒழுங்கு வரிசை, பவளமாலை போன்றது
கொழுநர் செய்தபற்குறி வரிசை என்க.                          (10)