குலோத்துங்கன் கச்சியடைந்தமை 300. | விட்டஅதி கைப்பதியி னின்றுபய | | ணம்பயணம் விட்டுவிளை யாடி அபயன் வட்டமதி ஒத்தகுடை மன்னர்தொழ நண்ணினன்வ ளங்கெழுவுகச்சி நகரே. |
(பொ-நி.) அபயன் அதிகைப்பதியினின்று, பயணம் பயணம் விட்டுவிளையாடி மன்னர்தொழ, கச்சிநகர் நண்ணினன். (எ-று.) (வி-ம்.) பயணம், பயணம்விட்டு - பயணப்பட்டும். பின், ஓரிடத்தைவிட்டும்; பின்பயணப்பட்டும். மன்னர் சிற்றரசர் பலர். நண்ணினன்-அடைந்தான்; கெழுவு-பொருந்திய (69) |