| இங்ஙனம் கூறும் காளிதிரு முன் கலிங்கத்துப் போர்கண்ட பேய் வந்தமை | 301. | என்னுமித நன்மொழி எடுத்திறைவி | | | சொல்லுவதன் முன்னம்இகல் கண்ட தொருபேய் தன்னுடைய கால்தனது பின்பட மனத்துவகை தள்ளிவர ஓடிவரவே. |
(பொ-நி.) இறைவி மொழி எடுத்துச் சொல்லுவதன்முன்னம் இகல்கண்டதொரு பேய், கால்பின்பட, உவகை தள்ளிவர, ஓடிவர; (எ-று.) (வி-ம்.) என்னும் - காஞ்சி அடைந்தான் என்னும், இதநன்மொழி- இதமான நல்மொழி. இகல் - கலிங்கப்போர். பின் - முதுகு. மனத்துவகை- மன மகிழ்வு: ஏழன்தொகை. தள்ளிவர-முன்னிட. (70) |