இதுவும் அது

305.வயிறுக ளென்னிற் போதா
      வாய்களோ போதா பண்டை
எயிறுக ளென்னிற் போதா
     என்னினும் ஈண்டப் போதும்.

     (பொ-நி.) வயிறுகள்  போதா; வாய்கள்  போதா; எயிறுகள் போதா
என்னினும், ஈண்டப் போதும்; (எ-று.)

     (வி-ம்.) போதா - போதமாட்டா; பற்றா. எயிறு - பற்கள். ஈண்டுதல்-விரைதல். போதும்-செல்வோம்.                               (74)