அதுகேட்ட மற்றைப் பேய்கள் நிலை

307.என்ற வோசை தஞ்செவிக்
      கிசைத்தலும் தசைப்பிணம்
தின்ற போற்ப ருத்துமெய்
     சிரித்துமேல் விழுந்துமே.

     (பொ-நி.)  என்ற  ஓசை இசைத்தலும், தின்றபோல் பருத்து, சிரித்து,
மேல் விழுந்து; (எ-று.)

     (வி-ம்.) ஓசை - கலிங்கப்போர்  கண்ட  பேயின் பேச்சொலி. மெய்
பருத்து என இயைக்க. மேல்விழுந்து - ஒன்றன்மேல்  ஒன்றாக   விழுந்து. தசைப்பிணம் - சதையையுடைய பிணங்கள்.                    (76)