இதுவும் அது

308.ஓகை சொன்ன பேயின் வாயை
      ஓடி முத்த முண்ணுமே
சாகை சொன்ன பேய்க ளைத்த
     கர்க்க பற்கள் என்னுமே.

     (பொ-நி.) வாயை  முத்தம் உண்ணும்,  பற்கள்  தகர்க்க  என்னும்.
(எ-று.)

     (வி-ம்.) ஓகை   மகிழ்ச்சிச்செய்தி.   முத்தம்   உண்ணும்  - முத்தங்
கொடுக்கும். சாகை - பசியால்  சாதலை.  தகர்த்தல் - உடைத்தல். பற்கள்-பற்களை.                                                 (77)