இதுவும் அது

309. பிள்ளை வீழ வீழ வும்பெ ருந்து ணங்கை கொட்டுமே
 வள்ளை பாடி ஆடி ஓடி வாவெ னாவ ழைக்குமே.

     (பொ-நி.) துணங்கை கொட்டும், பாடி, ஓடி அழைக்கும்; (எ-று.)

     (வி-ம்.) பிள்ளை-கையில் இடுக்கியுள்ள பேயின் பிள்ளைகள், வீழவும்-
கீழே வீழ்ந்துவிடவும். துணங்கை - பேய்க்கூத்து. வள்ளை உலக்கைப்பாட்டு.
வா எனா-வருக என்று கூறி. அழைக்கும்-மற்றப் பேய்களையும் விளையாட
அழைக்கும்.                                              (78)