குலோத்துங்கன்பால் கொண்ட மையல்கூறி விளித்தது

31. தண்கொடை மானதன் மார்புதோய்
     தாதகி மாலையின் மேல்விழும் 
கண்கொடு போம்வழி தேடுவீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.

     (பொ-நி)மானதன் தாதகி மாலையின் மேல் விழும் கண்கொடு வழி
தேடுவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கொடை - கொடுத்தல். மானதன்- குலோத்துங்கன் தாதகி -
ஆத்தி. கொடு(இடைக்குறை)-கொண்டு. போம்வழி-தாம் போம்  வழி.  கண்
மாலைமீதே பதிந்து மயக்கத்தை விளைத்துவிட்டமையின், தாம்போம்  வழி
எதுவென்றும்  தேடவேண்டியதாயிற்றென்க. கனகம்-பொன். நெடுங்கடை-
நீண்ட வாசல்.                                               (11)