இதுவும் அது

310.எனாஉ ரைத்த தேவி வாழி
      வாழி யென்று வாழ்த்தியே
கனாஉ ரைத்த பேயி னைக்க
     ழுத்தி னிற்கொ டாடுமே.

     (பொ-நி.) வாழ்த்தி, கழுத்தினிற்கொடு ஆடும். (எ-று.)

     (வி-ம்.) எனா-குலோத்துங்கன் காஞ்சியில் வந்து  தங்கினான்  என்று.
தேவி-காளி. உரைத்த-முன்பு உரைத்த. கொடு:இடைக்குறை: கட்டிக் கொண்டு.
ஆடும்-கூத்தாடும்.                                        (79)