கலிங்கத்துப்பேயைக் காளி போர்நிலை வினாயது

311.ஆடிவரு பேய்களின் அலந்தலை
      தவிர்த்தடு பறந்தலை யறிந்த தனினின்
றோடிவரு பேயைஇக லுள்ளபடி
     சொல்கென வுரைத்தன ளுரைத்த ருளவே.

     (பொ-நி.)  தவிர்த்து  பேயை  இகல்  சொல்க  என  உரைத்தனள்.
உரைத்தருள; (எ-று.)

     (வி-ம்.) பேய்கள் -போர்ச்செய்தி கேட்ட பேய்கள். அலந்தலை-நிலை
கலங்கிய தன்மை. பறந்தலை-போர்க்களம். இகல்-போர்.  உரைத்து  அருள-
சொல்ல.                                               (80)