கலிங்கப்போர் உரைத்தற்கருமை 312. | மாவா யிரமும் படக்கலிங்கர் | | மடிந்த களப்போர் உரைப்போர்க்கு நாவா யிரமுங் கேட்போர்க்கு நாளா யிரமும் வேண்டுமால். |
(பொ-நி.) கலிங்கர் மடிந்த போர் உரைப்போர்க்கு நாவா யிரமுங் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டும்; (எ-று.) (வி-நி.) மா-யானை. பட - இறந்துபோம்படி. நாள் ஆயிரம்-ஆயிரம் நாட்கள், அஃதாவது மிகுதியான ஆயுள். (1) |