இதுவும் அது

313.ஒருவர்க் கொருவாய் கொண்டுரைக்க
      ஒண்ணா தேனும் உண்டாகுஞ்
செருவைச் சிறியேன் விண்ணப்பஞ்
     செய்யச் சிறிது கேட்டருளே.
 
    (பொ-நி.)    உரைக்கஒண்ணாதேனும்,   சிறியேன்,    விண்ணப்பம்
செய்யக்கேட்டருள்; (எ-று.)

     (வி-ம்.) ஒருவர்க்கு ஒருவாய்கொண்டு  - ஒரே வாயினால் ஒண்ணாது
என இயைக்க. செரு -போர். விண்ணப்பம் செய்ய-சிறிதளவு தெரிவிக்க.
                                                         (2)