காஞ்சியின் சிறப்பு 314. | பாரெ லாமுடை யான்அப யன்கொடைப் | | பங்க யக்கரம் ஒப்பெனப் பண்டொர்நாள் காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச னம்பொழி காஞ்சிய தன்கணே. |
(பொ-நி.) அபயன்கரம் ஒப்பென, ஒருநாள் காரெலாம் காஞ்சனம் பொழி காஞ்சி அதன்கண்; (எ-று.) (வி-ம்.) பார் எலாம் - உலகம் யாவும். அபயன் - குலோத்துங்கன். பங்கயம் - தாமரை. கார் -மேகம். காஞ்சனம்-பொன். (3) |