குலோத்துங்கன் தங்கிய மாளிகை மண்டப இயல்பு 315. | அம்பொன் மேரு வதுகொ லிதுகொலென் | | றாயி ரங்கதிர் வெய்யவன் ஐயுறும் செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபந் தன்னிலே. |
(பொ-நி.) வெய்யவன் ஐயுறும் மாளிகை மண்டப, தன்னில்; (எ-று.) (வி-ம்.) இது மாளிகையைக் குறித்தது. வெய்யவன்-ஞாயிறு. குடக்கு- மேற்கு. சித்திரமண்டபம். அழகிய மண்டபம். (4) |