வீற்றிருந்த இடச்சிறப்பு

316.மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள்
      முகட்டெ ழுந்த முழுமதிக் கொப்பென
நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின்
     நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே.
 
     (பொ-நி.)  தாரகை  வானின்  முகட்டு  எழுந்த மதிக்கு ஒப்பு என நித்திலப் பந்தரில் வெண்குடை ஒன்று நிழற்ற; (எ-று.)

     (வி-ம்.) மொய்த்து -நெருங்கி. தாரகை - உடுக்கூட்டம். முகடு -உச்சி.
நெய்த்து -நெய்த்தன்மைதோற்றி  (வழவழப்பாயும்  பளபளப்பாயும் தோற்றி)
நித்திலம் முத்து. நிழற்ற-நிழலைச் செய்ய.                        (5)