சிம்மாதனத்தில் இருந்தமை 318. | அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வைத் | | தாட கக்கிரி யில்புலி வைத்தவன் சிங்க ஆசனத் தேறி யிருப்பதோர் சிங்க ஏறெனச் செவ்வி சிறக்கவே. |
(பொ-நி.) ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து, கிரியில் புலிவைத்தவன் சிங்க ஏறு எனச் செவ்வி சிறக்க; (எ-று.) (வி-ம்.) அங்கண் - அழகிய இடம். ஞாலம் - உலகம். ஆடகக் கிரி-மேருமலை. சிங்க ஆசனம் - அரியணை. சிறக்க-மேம்பட. ஏறு-ஆண். செவ்வி-அழகு. (7) |