வீற்றிருந்த சிறப்பு

319.பணிப்ப ணத்துறை பார்க்கொரு நாயகன்
      பல்க லைத்துறை நாவி லிருந்தவன்
மணிப்ப ணிப்புயத் தேசிங்க வாகனி
     வந்து செந்திரு மாதொ டிருக்கவே.

     (பொ-நி.)  நாயகன், இருந்தவன் புயத்தே சிங்க வாகனி திருமாதொடு
இருக்க; (எ-று.)

     (வி-ம்.) பணி - பாம்பு  (ஆதிசேடன்).  பணம் - படம் (தலை) பார்-
உலகம். இருந்தவன்-இருக்கப்பெற்றவன். மணி -இரத்தினம். பணி -அணிகள். சிங்கவாகனி-சிங்கஊர்தியையுடையவள்; வீரமகள். திருமாது-திருமகள்.   (8)