இதுவும் அது 32. | அஞ்சியே கயல்கெடக் கூடலிற் பொருதுசென்று | | அணிகடைக் குழையிலே விழஅடர்த் தெறிதலால் வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண் மடநலீர் இடுமணிக் கடைதிறந் திடுமினோ. |
(பொ-நி) கயல்கெட, கடலிற்பொருது, சென்று, குழையிலே விழ அடர்த்து எறிதலால், வஞ்சிமானதன் படையினிற் கொடியகண் மடநலீர் திறந்திடுமின்; (எ-று.) (வி-ம்.)கயல்-கெண்டைமீன்; மீனக்கொடி. கூடல்-இருகண் கூடுமிடம்; மதுரை பொருது-மோதி; போர்செய்து. குழை-காதணி, காடு. விழ- கண்விழ; பாண்டியர் விழ. அடர்த்து எறிதல் - நெருங்கிமோதுதல்; நெருங்கி அழித்தல். வஞ்சி மானதன்-வஞ்சி சூடிய குலோத்துங்கன். படை - வேற்படை. கண் மடநலீர்: இரண்டன் உருபும் பயனும் தொக்க தொகை, கண்ணின் பிறழ்ச்சி கூறப்பட்டது. மகளிர் கண்ணிற்கும் குலோத்துங்கன் படைக்கும் சிலேடை வகையால் ஒப்புமை கூறியதாம். (12) |