தேவியர் உடன் இருந்தமை

320.தரும டங்க முகந்து தனம்பொழி
      தன்பு யம்பிரி யாச்சயப் பாவையும்
திரும டந்தையும் போல்பெரும் புண்ணியம்
     செய்த தேவியர் சேவித்தி ருக்கவே.

     (பொ-நி.) தனம்பொழி புயம் பிரியா தேவியர் சேவித்திருக்க; (எ-று.)

     (வி-ம்.) தரு - கற்பகத்தரு.  மடங்க  நாணித் தலை கவிழ.  முகந்து-
அள்ளி.தனம் - பொருள்.பொழிகின்ற  புயம்  என்க. தேவியர் மனைவிமார்     (தியாகவல்லியும்  ஏழிசை வல்லபியும்)  சேவித்தல் - வணங்கல்.        (9)