ஆடல்பாடல் மகளிர் சூழ்ந்திருந்தமை 321. | நாட காதி நிருத்த மனைத்தினும் | | நால்வ கைப்பெரும் பண்ணினும் எண்ணிய ஆடல் பாடலரம்பையர் ஒக்குமவ் வணுக்கி மாரு மநேக ரிருக்கவே. |
(பொ-நி.) நிருத்தம் அனைத்தினும், பண்ணிணும், எண்ணிய ஆடல் பாடல் அணுக்கிமாரும் அநேகர் இருக்க; (எ-று.)
(வி-ம்.) நாடகம் - நாட்டியம்; (புறநடம்), நிருத்தம் - தாண்டவம். நால்வகைப் பண் - பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை என்னும் பண்கள். அணுக்கிமார்-அணுகியிருப்போர். (10) |