சூதர், மாகதர், மங்கலப்பாடகர் புகழ்ப்பாடல் 322. | சூதர் மாகதர் ஆதிய மாந்தரும் | | துய்ய மங்கலப் பாடகர் தாமும்நின் பாத மாதர ராயவர் கட்கெலாம் பைம்பொன் மௌலி எனப்புகழ் பாடவே. |
(பொ-நி.) மாந்தரும், பாடகர்தாமும் "நின்பாதம் மௌலி" எனப்புகழ் பாட; (எ-று.) (வி-ம்.) சூதர் - நின்று ஏத்துவோர். மாகதர்- இருந்து ஏத்துவோர். ஆதரர்-நண்பு பூண்ட சிற்றரசர் (ஆதரம்-அன்பு). மௌலி-முடி. (11) |