| இசைவல்லார் அருகு சூழ்ந்தமை | 323. | வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர் | | | வேறு வேறிவை நூறுவி தம்படக் காண லாம்வகை கண்டனம் நீயினிக் காண்டல் வேண்டு மெனக்கழல் போற்றவே. |
(பொ-நி.) வல்லவர்; "நூறு விதம்படக் கண்டனம் காண்டல் வேண்டும்," எனப் போற்ற; (எ-று.) (வி-ம்.) தண்ணுமை -மத்தளம், கண்டனம்-இசைகூட்டி அமைத்தோம். கழல்-திருவடிகள். (12) |