குலோத்துங்கன் இசைப்பாடல் கேட்டதும் ஆராய்ந்து
குற்றங் கண்டதும்
 
324.தாள மும்செல வும்பிழை யாவகை
    தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள மும்களி றும்பெறும் பாணர்தம்
   கல்வி யில்பிழை கண்டனன் கேட்கவே.

     (பொ-நி.) பிழையாவகை  பாடி,  பெறும்  பாணர்தம்  கல்வியில்பிழை கண்டனன் கேட்க; (எ-று.)

     (வி-ம்.) செலவு-உலவிப்பாடுதல். தான்:குலோத்துங்கன், குலோத்துங்கன்
இசை நூல் இயற்றியிருந்தான் என்க. "சோழ குலசேகரன் வகுத்த  இசையி்ன்"
(தா.285) என வந்தது காண்க. காளம்-ஊதுகொம்பு.  கண்டனன்: முற்றெச்சம்.
                                                          (13)