சிற்றரசர்கள் குடைபிடித்துச் சாமரை வீசியது

325.வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி
      வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
     தாங்கள் தங்கரத் தால்பணி மாறவே.

     (பொ-நி.)  களிற்றினில்   இழிந்தபின்,  அடிவீழ்ந்த  மன்னவர்  தம்
கரத்தால், குடை சாமரம் என்றிவை பணி மாற; (எ-று.)

     (வி-ம்.) வெந்நிடுதல் - புறமுதுகிடுதல். இடு -போர்க்களத்தில் போட்டு விட்டுப்போன. பணிமாற-பணிவிடை செய்ய.                       (14)