சிற்றரசர் தேவிமார் சேடியராய் இருந்தமை 326. | தென்ன ராதிந ராதிப ரானவர் | | தேவி மார்கள்தன் சேடிய ராகவே மன்ன ராதிபன் வானவ ராதிபன் வந்தி ருந்தனன் என்னஇ ருக்கவே. |
(பொ-நி.) நராதிபரானவர் தேவிமார்கள் சேடியராக, ஆதிபன் இருக்க; (எ-று.) (வி-ம்.) தென்னர் - பாண்டியர். நராதிபர் - அரசர். நராதிபரனவர் தேவிமார்கள்; நான்கன்தொகை. தேவிமார்கள்-மனைவியர். சேடி-பணிப்பெண். மன்னர் ஆதிபன்-குலோத்துங்கன். வானவர்-ஆதிபன்-இந்திரன். (15) |