| இட்ட திறை | 334. | ஆரம் இவைஇவை பொற்கலம் | | | ஆனை இவைஇவை ஒட்டகம் ஆடல் அயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம் ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய ஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில்ப தக்கமே. |
(பொ-நி.) இவைஆரம்; இவை பொற்கலம்; இவைஆனை; இவை ஒட்டகம்; இவை அயம்; இவை ஆதி முடியொடு, பெட்டகம், நித்திலம்; இவை ஏகவடம். இவை பதக்கம்; (எ-று.) (வி-ம்.) ஆரம் - மாலை. கலம் - அணிகள். ஆடல் -வலிமை. அயம்- குதிரை. முடி-தலையணி. பெட்டகம்-பெட்டி. ஈரம்-குளிர்ச்சி. நித்திலம்-முத்து. ஏகவடம் - ஒற்றைச் சரமாலை. விலையாதும் இல் என இயைக்க. (23) |