இதுவும் அது 335. | இவையும் இவையும்ம ணித்திரள் | | இனைய இவைகன கக்குவை இருளும் வெயிலும்எ றித்திட இலகு மணிமக ரக்குழை உவையும் உவையும்இ லக்கணம் உடைய பிடிஇவை உட்பக டுயர்செய் கொடிஇவை மற்றிவை உரிமை அரிவையர் பட்டமே. |
(பொ-நி.) இவையும் இவையும் மணித்திரள்; இவைகனகக்குவை. மகரக்குழை: உவையும் உவையும் பிடி, இவை பகடு; இவை கொடி; இவை |பட்டம்; (எ-று.) (வி-ம்.) மணி - இரத்தினம். இனைய - இத்தன்மையனவாகிய. கனகம்- பொன். மகரக்குழை - சுறாமீன் வடிவான காதணி. நீலமணியும் வைரமும் பதித்தமையின் இருளும் வெயிலும் எறித்தன வென்க. பிடி - பெண் யானை. பகடு -ஆண் யானை. மனங் கவரும் இயல்பு வாய்ந்தமை குறிக்க உள் பகடு என்றார்.அரிவையர்-பெண்கள். பட்டம், நெற்றிப்பட்டம். (24) |