இதுவும் அது

336.ஏறி யருள வடுக்குமிந் நூறு களிறு மிவற்றெதிர்
      ஏனை யரச ரொருத்தரோ ரானை யிடுவ ரெனிற்புவ
மாறி அருள அவர்க்கிடை யாமும் இசைவம் எனப்பல
     மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே.

     (பொ-நி.) நூறு  களிறும்  ஏறி  அருள அடுக்கும். இவற்று  எதிர் ஓர்
ஆனை இடுவர் எனில் அவர்க்கு இடை இசைவம் என உரைப்பார்;  (எ-று.)

     (வி-ம்.) அடுக்கும் -தகுதியாகும்.  எதிர்-எதிராக (ஒப்பாக). மாறி-விற்று.
அருள் (யானை) கொடுத்த. அவ்வவர்க்கு எனற்பாலது அவர்க்கு என நின்றது.
இடை  -  சமமாக.   இசைவம்  -  கொடுக்க    இயைவோம்.   மானம் -பெருமையினையுடைய. வாழ்வு-தங்கள் நல்வாழ்வு.                 (25)