திறைபெற்ற குலோத்துங்கன் வினாயது

337.அரசர் அஞ்சலென அடியி ரண்டுமவர்
      முடியின் வைத்தருளி அரசர்மற்
றுரைசெ யுந்திறைகள் ஒழிய நின்றவரும்
     உளர்கொ லென்றருளு பொழுதிலே.

     (பொ-நி.) 'அஞ்சல்' என, அடிமுடியின் வைத்தருளி "அரசர் திறைகள்
ஒழிய நின்றவரும் உளர்கொல்" என்று அருளு பொழுதினில்; (எ-று.)

     (வி-ம்.)   அரசர்  அஞ்சல் - அரசர்களே    அஞ்சாதீர்    அல்-
எதிர்மறை   வியங்கோள்.  அவர்முடி - அவ்வரசர்கள்  தலையின்  மேல்.
உரைசெயும்  -   சொல்லப்படுகின்ற.   திறைகள்   ஒழிய    நின்றவர் -
திறைசெலுத்தாதவர். அருளுதல் - கேட்டருளுதல்.                  (26)