வினாயதற்கு மறுமொழி

338.கடவ தந்திறைகொ டடைய வந்தரசர்
      கழல்வ ணங்கினர்கள் இவருடன்
வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை
     வருகி லன்திறைகொ டெனலுமே.

     (பொ-நி.)  அரசர்   திறைகொடுவந்து  வணங்கினர்,  கலிங்கர்  பதி
வருகிலன் எனலும்; (எ-று.)

     (வி-ம்.) கடவ-செலுத்தக் கடவதான. அமைந்து ஒரு சேர. வட கலிங்கர்
பதி-வடக்கிலுள்ள கலிங்க நாட்டு வேந்தன். இரண்டு விசை-இருமுறை.