அதுகேட்ட குலோத்துங்கன் நிலை

339.உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர்
      உயிர்ந டுங்கஒளிர் பவளவாய்
முறுவல் கொண்டபொருள் அறிகி லம்சிறிதும்
     முனிவு கொண்டதிலை வதனமே.

     (பொ-நி.) அரசர் "என்கொல்"  எனக்  குலைந்து  நடுங்க  பவளவாய்
முறுவல் கொண்டபொருள் அறிகிலம்; வதனம் முனிவு கொண்டதிலை; (எ-று.)

     (வி-ம்.) உறுவது - நேரப்போவது. முறுவல் -புன்னகை,  எள்ளியதால்
எழுந்தது. முனிவு-சினம். வதனம்-முகம்.                         (28)