கலவி மயக்க நிலை கூறி விளித்தது

34. கலவிக்களியின் மயக்கத்தாற்
    கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
   நீள்பொற் கபாடந் திறமினோ.

   (பொ-நி) களியின்  மயக்கத்தால்,  கலை  அகல,  நிலவை  எடுத்து
உடுப்பீர் திறமின்; (எ-று.)

   (வி-ம்) கலவி - புணர்ச்சி.  களி-கள்ளுண்டு  களித்தது போன்ற மிகு
மகிழ்ச்சி. கலை - ஆடை. அகல - உலைந்துபோக; மதி-நிலா. நிலவு-நிலா
வொளி. துகில்-ஆடை.  உடுப்பீர் - அணிவீர். நிலவொளியைத் துகிலாகக் கருதினர் என்க.                                            (14)