தொண்டைமான் விடை கொண்டது

342.அடைய அத்திசைப் பகைது கைப்பனென்
      றாசை கொண்டடல் தொண்டைமான்
விடையெனக்கெனப் புலியு யர்த்தவன்
     விடைகொ டுக்கஅப் பொழுதிலே.

     (பொ-நி.)  தொண்டைமான்  "பகை   துகைப்ப"  னென்று  ஆசை
கொண்டு  “எனக்கு  விடை”  என,  புலி  உயர்த்தவன்  விடை  கொடுக்க,  அப்பொழுதில்; (எ-று.)

     (வி-ம்.)  அடைய  - முழுதும்.   துகைப்பன் - அழிப்பன். அடல் -
வலிமை.  புலிஉயர்த்தவன் - புலிக்கொடியை  உயர்த்தின  குலோத்துங்கன்.
                                                         (31)