படை திரண்டது

343.கடல்க லக்கல்கொல் மலையி டித்தல்கொல்
      கடுவி டப்பொறிப் பணபணிப்
பிடரொ டித்தல்கொல் படைநி னைப்பெனப்
     பிரள யத்தினில் திரளவே.

    (பொ-நி.)  படைநினைப்பு, கடல்கலக்கல்கொல், மலை  இடித்தல்கொல்,
பணிப்பிடர் ஒடித்தல்கொல் எனப் பிரளயத்தினில் திரள: (எ-று.)

     (வி-ம்.) பொறி -புள்ளி.  பணம்-படம். பணி- (ஆதிசேடனாகிய) பாம்பு.
பிடர்-கழுத்து. பிரளயம் - முடிவுகாலவெள்ளம். படை நினைப்பு -படைகளின்
கருத்து.                                                   (32)