படையின் முழக்கொலி 344. | வளைக லிப்பவும் முரசொ லிப்பவும் | | மரமி ரட்டவும் வயிரமாத் தொளையி சைப்பவும் திசையி பச்செவித் தொளைய டைத்தலைத் தொடரவே. |
(பொ-நி.) கலிப்பவும், ஒலிப்பவும், இரட்டவும், இசைப்பவும், திசை இபச்செவி தொளை அடைத்தலைத் தொடர; (எ-று.) (வி-ம்.) வளை-சங்கு. மரம்-இயமரம்; போர்ப்பறை வயிர்-ஊதுகொம்பு. வயிர ஆறனுருபேற்ற தென்க. இபம்-யானை. செவித் தொளை அடைத்தல்- காதுத் தொளையிற்சென்று ஒலிவிம்மிப் பரத்தல். முழக்கொலி அடைத்தலைச் செய்யத் தொடர்ந்து சென்றன வென்க. (33) |