படை நெருக்கம்

345.குடைநி ரைத்தலின் தழைநெ ருக்கலின்
      கொடிவி ரித்தலின் குளிர்ச துக்கமொத்
திடைநி ரைத்தலின் பகல்க ரப்பவுய்த்
     திருநி லப்பரப் பிருள்ப ரக்கவே

     (பொ-நி.) நிரைத்தலில்,  நெருக்கலில், விரித்தலில், இடைநிரைத்தலில்,
பகல் கரப்ப உய்த்து, இருள் பரக்க. (எ-று.)

     (வி-ம்.) தழை-மயிற்பீலியால் விசிறி வடிவாக இயற்றப்பட்டது. சதுக்கம்-
சந்து. இடை - இடம். பகல் - ஞாயிறு. கரப்ப - மறைய. இருநிலம் - பெரிய
மண்ணுலகம்.                                              (34)