இதுவும் அது

346.அலகில் கட்டழல் கனல்வி ரித்தலால்
      அரிய பொற்பணிக் கலனெ றித்தலால்
இலகு கைப்படை கனல்வி ரித்தலால்
     இருள்க ரக்கவே ஒளிப ரக்கவே.

    (பொ-நி.) கண்  கனல்  விரித்தலால், கலன் எறித்தலால், படை கனல்
விரித்தலால், இருள் கரக்க, ஒளிபரக்க; (எ-று.)

     (வி-ம்.) அலகு - அளவு. தழல் -நெருப்பு. கனல் - அனல். விரித்தல்-பரப்புதல்.  கலன்  -  அணிகள்.    கைப்படை  -  கையிலுள்ள  ஆயுதம்.   எறித்தலால் - ஒளிவீசுதலால்.                                  (35)