இதுவும் அது

347.அகில வெற்புமின் றானை யானவோ
      அடைய மாருதம் புரவி யானவோ
முகில னைத்துமத் தேர்க ளானவோ
     மூரி வேலைபோர் வீர ரானவோ.

     (பொ-நி.)  வெற்பும்  ஆனையானவோ ; மாருதம்  புரவி  யானவோ;
முகிலனைத்தும் தேர்களானவோ; வேலை வீரரானவோ;(எ-று.)

     (வி-ம்.)  வெற்பு-மலை.  மாருதம்-காற்று. புரவி-குதிரை. முகில்-மேகம்.
மூரி-வலிமை. வேலை-கடல்                                  (36)